தொடரும் நெருக்கடியால் நாட்டிலிருந்து வெளியேறும் ரணில்!

Report Print Vethu Vethu in அரசியல்

கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், நாட்டிலிருந்து வெளியேற முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு நிலையான தீர்வு காணாமல் ரணில் வெளிநாடு செல்வது குறித்து கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சிங்கப்பூர் செல்லும் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து மொங்கோலியா நோக்கி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.