ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் சந்திப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளார்.

இன்று முற்பகல் வேளையில் ரணில், இந்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளதாகவும் இது குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதலில் மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மாநாயக்க தேரரை சந்தித்து தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் அஸ்கிரி பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்து தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளார்.

எதிர்வரும் 5ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஐக்கிய தேசிய முன்னணியிலும் ஏற்படக் கூடிய மாற்றங்கள் தொடர்பில் இரண்டு, மாநாயக்க தேரர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க கொழும்பிலிருந்து தனியாகவே கண்டிக்கு சென்று மாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.