பிரதமரின் பொதுஜன தொடர்பு பிரிவு திறந்து வைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

தனது பொதுஜன தொடர்பு பிரிவை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று முற்பகல் திறந்து வைத்துள்ளார்.

கொழும்பு - கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் அலரி மாளிகைக்கு அருகில் இலக்கம் 101 என்ற விலாசத்தில் இந்த பொதுஜன தொடர்பு பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்திற்கு வந்து எவரும் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும். முறைப்பாடுகள் தொடர்பான கடிதங்கள் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பதை தனியாக தேடி அறிய உள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.