படைவீரர்கள் வேட்டைப் பற்றி பேசியவர்கள் இன்று சீ.ஐ.டி.ஐ வேட்டையாடுகின்றனர்! நளின் பண்டார

Report Print Kamel Kamel in அரசியல்

படைவீரர்கள் வேட்டையாடப்படுவதாக குற்றம் சுமத்திய தரப்பினர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களை வேட்டையாடி வருகின்றார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கடத்தல்கள், காணாமல் போதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய படைவீரர்களுக்கு எதிராக எமது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்த போது படைவீரர்கள் வேட்டையாடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் இப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை வேட்டையாடி வருகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்து மறைமுகமான அச்சுறுத்தல்களை விடுத்து அவர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் நாட்டில் ஓர் வியாகுலமான நிலைமை உருவாகியுள்ளது, இதன் பாதக விளைவுகளை மக்களே எதிர்நோக்க நேரிடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எவ்வித காரணமும் இன்றி நாடாளுமன்றை ஒத்தி வைத்துள்ளார்.

புதிய அரசாங்கம் தெரிவானதன் பின்னர் முன்னரை விடவும் நாடாளுமன்றம் கூடி புதிய திட்டங்கள் குறித்து வாதப் பிரதிவாதங்கள் செய்யப்பட வேண்டும் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.