ஜனாதிபதி கோட்டாபய குறித்து மரிக்காருக்கு எழும் சந்தேகம்!!

Report Print Varun in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளமை குறித்து தமக்கு சந்தேகம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

புதிதாக பதவியேற்ற ஜனாதிபதிக்கு தேவையானால் நாடாளுமன்றத்தை எதிர்வரும் வாரம் கூட்டி நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்த முடியும்.

இருந்தாலும் அவ்வாறு செய்யாமல் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை இவ்வாறு ஒத்திவைத்தமையே தமக்கு சந்தேகத்தை தோற்றுவிப்பதாக அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் சில தினங்களில் கோப் குழு கூடவிருந்த சமயத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமையால் இந்த குழுவின் அறிக்கைகளை சமர்பிப்பதில் தாமதம் ஏற்படலாம். அதேபோல எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் ஜனாதிபதி விசேட உரையை நிகழ்த்தி நாடாளுமன்றத்தை கலைத்து விட்டால் கோப் குழு கூட கலைந்து விடும். அக்குழுவின் அறிக்கைகள் கூட ஏற்றுக்கொள்ளப்படாமல் போகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,என்று குறிப்பிட்டார்.