ஓய்வுபெறத் தயாராகும் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், ஓய்வுபெற்ற பிரதமருக்கு கிடைக்கும் சிறப்புரிமைகளை தனக்கு வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. மாநாயக்க தேரர்களுடனான சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க, நன்றி தெரிவிப்பதற்காக மாநாயக்க தேரர்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.