மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு, உன்னிச்சைக் குளத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறினேசனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மண்முனை, மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநாதனின் முயற்சியினால் இந்த திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உன்னிச்சைகுளம் பகுதி சுற்றுலா மையமாக மாறிவரும் நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் வருகைதருவதனால் தமிழர்களின் அடையாளத்தினை வெளிப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உன்னிச்சை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஆர்.விஜயரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள், கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.