சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் சர்வதேச நாடகம்: குணதாச அமரசேகர

Report Print Steephen Steephen in அரசியல்
122Shares

சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான பல தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அறிந்திருக்கின்றார் என்பது அவர் வெளியிடும் கருத்துக்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் உடனடியாக அவரிடம் வாக்குமூலத்தை பெற வேண்டும் எனவும் தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ராஜகிரியவில் உள்ள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தளவு தகவல்களை அறிந்தும் அதனை மூடிமறைப்பது குற்றச் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அமைப்புகள் ஒன்றியம் இந்த சம்பவத்தை ஒரு நாடகமாகவே பார்க்கின்றது. இது ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கும் சர்வதேச நாடகம் என்பது தெளிவானது.

மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் குற்றச்சாட்டுக்களை ஒப்புவிக்க இந்த பொறியை வைத்துள்ளனர்.

19ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். திருத்தம் செய்ய வேண்டுமாயின் ஏன் அதனை நிறைவேற்றினர்.

எந்த வகையிலும் 19ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்யக் கூடாது. அது இரவு விழுந்த குழியில் பகலில் விழுவதற்கு ஈடானது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.