ஜனாதிபதியின் நடவடிக்கை மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள மங்கள

Report Print Steephen Steephen in அரசியல்

தலைவர்களின் படங்கள் கொண்ட தோரணங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வட கொரியா பாணியிலான இப்படியான தோரணங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் 2015 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

இந்த முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் முக்கியமானது. அதனை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டும்.

எப்படியான நிலைமையாக இருந்தாலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.