மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பான விசாரணை அறிக்கை இரகசியமாக வைக்கப்படும்!

Report Print Ajith Ajith in அரசியல்

மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இரகசிய முறையில், கோப் செயலகத்தில் வைக்கப்படும் என்று அதன் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கோப் குழு அமைக்கப்படும் வரை, குறித்த அறிக்கை கோப் செயலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் மத்திய வங்கியின் 2002 முதல் 2015ம் ஆண்டு வரையான பணபரிமாற்றங்கள் தொடர்பில் ஆய்வுக்கணக்குகள் அடங்கியுள்ளன.

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிக்கைகளை கோப் உறுப்பினர்கள் மாத்திரமே கையாளமுடியும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோப் குழுவின் கூட்டம் நேற்று நடைபெறவிருந்தபோதும் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டமையால், கூட்டம் ரத்துச்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.