அரசியல் பயணப் பாதை தவறியுள்ளமையினால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பயணப் பாதைக்கான ஆலோசனை அவசியமாகும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தவறு இழைக்கப்பட்ட இடத்திலிருந்து பாடத்தைக் கற்க வேண்டும். மக்களின் கருத்தை செவிமடுக்க வேண்டும். அரசியல் கட்சி ஒன்று, மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ள முடியவில்லையாயின், அவ்வாறான அரசியல் கட்சிக்கு எதிர்காலம் இல்லை.
இந்நிலையில், சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பன மேலும் தாமதமாகாமல் வழங்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.