ஜனாதிபதி கோட்டாபயவின் புதிய தீர்மானம்! பொது மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நிர்மாணப் பணிகளின் போது மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான அனுமதி பெறுதலை இரத்துச் செய்வதற்கான முடிவினை ஜனாதிபதி எடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் கல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் பெற வேண்டியிருந்தது.

இந்நிலையில் நேற்று முதல் அனுமதிப் பத்திரம் பெறுவது இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையினால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, தீர்மானத்தை நாளை (05) முதல் நடைமுறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று (04) நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.