மைத்திரியின் சகோதரரது சம்பளத்தை பாரியளவில் குறைத்த ஜனாதிபதி

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேனவின் சம்பளத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாரியளவில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

குமாரசிங்க சிறிசேன, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரச நிறுவனங்களில் பதவி வகித்த ஏனைய நிறுவனத் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கு இதுவரையில் இரண்டு மில்லியன் ரூபா சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவு தொகை வழங்கப்பட்டு வந்ததாகவும் இந்த தொகையை இரண்டரை லட்சம் ரூபாவாக குறைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குமாரசிங்க சிறிசேனவின் பதவியில் மாற்றம் செய்வதில்லை என முன்னதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு உறுதிமொழி வழங்கிய போதிலும் தற்பொழுது வேறும் ஒருவருக்கு ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவி வழங்கப்படலாம் என தெற்கு ஊடகமொன்று ஊகம் வெளியிட்டுள்ளது.