உலகத் தமிழர்களுக்கான ஒரேயொரு தலைவர் விடுதலை புலிகளின் தலைவரே! ப.உதயராசா

Report Print Mohan Mohan in அரசியல்

ஒட்டுமொத்த உலகத் தமிழர்களெல்லாம் அறிந்த தேசியத் தலைவர் வே.பிரபாகரன் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா பொதுமக்கள் மத்தியில் இன்று தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - சூரிபுரம் மற்றும் கேப்பாபுலவு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள காணி பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான கூட்டம் ஒன்று கேப்பாபுலவு மாதிரி கிராம பொது நோக்கு மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களுக்கே அவர்கள் தலைவர்களாக இருக்கின்றனர்.

இன்று தமிழ் மக்கள் சிறந்த தலைமைத்துவத்தை இழந்துள்ள நிலையில் தட்டிக்கேக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களிடம் வந்து வாக்குகளை பெற்று வாக்குறுதிகள் வழங்கி ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தமது கட்சியை வளர்க்கின்றார்களே தவிர மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

மேலும் எங்களுக்காக உயிரைத் துறந்தவர்களே இன்று இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது பதவிகளை வைத்துக்கொண்ட தமிழ் மக்களின் உரிமையை பெற்றுத்தரப்போகிறார்கள்.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டங்களில் வெற்றிபெறப்போவது தற்போதைய அரசு என்று நான் தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தினேன். காரணம் தற்போதைய ஜனாதிபதியுடன் பங்காளியாவதற்கே.

எனினும் தமிழ் மக்கள் வழங்கிய வாக்கு செய்தியின் காரணமாக நாம் இன்று அதை இழந்து நிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.