பொதுத் தேர்தலின் பின்னர் ஐ.தே.கவின் தலைமைப் பதவியில் மாற்றம்! மாயந்த திஸாநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

நாட்டை பாதுகாக்கும் சக்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு வலுவான எதிர்க்கட்சியாக திகழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படலாம், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படக் கூடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Latest Offers

loading...