நல்லூர் பிரதேச சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு எதிர் கட்சிகளால் தோற்கடிப்பு!

Report Print Sumi in அரசியல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வசமுள்ள நல்லூர் பிரதேச சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு எதிர் கட்சிகளால் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் விசேட பத்திரிகையாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்போது 2019ம் ஆண்டு, 2020ம் ஆண்டுக்கான வருமான பொலிவு தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட 2020ம் ஆண்டுக்கான பாதீட்டில் குறிப்பிடப்படவில்லை.

2019ம் ஆண்டு விகிதாசார வினைத்திறன் அற்றதாய் உள்ளது என்றும், 2019ம் ஆண்டுக்கான வருமான வரி 59 வீதம் என்றும் இதுவரை 69 என்றபடியாலும், இனிய வருமானம் காட்டப்படவில்லை என்றும், அவர்கள் தமது பாதீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் முக்கிய காரணிகளில் ஒன்றாக குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான வருமானம் ஒத்துப்போகவில்லை என்றும், 2020ம் ஆண்டு பாதீட்டில் வீத வரி வருமானம், வாடகை வருமானம் 10 மில்லியனுக்கு அதிகமாக உள்ளதென்றும் வருமான பொலிவில் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அரசு மானியம் 74 மில்லியன் என இருக்கும் பொழுது நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் அரசு வரை மானியம் பெறும் எனவும், இதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் 2020ம் ஆண்டு திண்மக் கழிவகற்றல் பொறிமுறை செலவீனம் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வழங்கு பொருட்களுக்கான செலவு மிகக் குறைந்தளவு ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் 20 உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers