இலங்கை விளையாட்டு வீரர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகள்!

Report Print Ajith Ajith in அரசியல்

தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இலங்கை விளையாட்டு வீரர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, நேபாளத்துக்கு செல்லும் முன்னர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுகவீனமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த விளையாட்டு வீரர்களை பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 7 வீரர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களும் ஏனைய வீரர்களுடன் டிசம்பர் 12ம் திகதி நாடு திரும்ப முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அடுத்த தெற்காசிய விளையாட்டுப்போட்டி இலங்கையில் இடம்பெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...