சட்டவிரோத குடியேறிகள் குறித்து பிரதமர் மகிந்தவுடன் அவுஸ்திரேலியா பேச்சு!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் குடியுரிமைகோரி வருகின்ற நபர்களைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றி பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் அவுஸ்திரேலியா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளது.

அண்மைய காலமாக அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக புகலிடம் கோருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

என்ற போதிலும் அவற்றை முழுமையாத தடுப்பதற்கான புதிய வழிமுறைகள் பற்றிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவை பல்வேறு சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹொலி பிரதமர் மகிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு அவுஸ்திரேபிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனின் வாழ்த்துக் கடிதத்தையும் இலங்கை்கான அவுஸ்திரேலிய தூதுவர் இதன்போது கையளித்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, உயர்கல்வி போன்ற துறைகள் பற்றி பேசப்பட்டன.

விசேடமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் குடிபெயரும் முயற்சிகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...