ஜனாதிபதி கோட்டாபயவின் பிரதான இலக்கு இதுதான்!

Report Print Murali Murali in அரசியல்

ஊழல்களை ஒழிப்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரதான இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“உண்மையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரதான இலக்குதான் ஊழல்களை ஒழிப்பதாகும். எதிர்வரும் தினங்களில் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கான பிரசாரங்களை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. ஜனாதிபதியின் பிரதான இலக்காக ஊழல் ஒழிப்பு அமைகிறது.

அதனை செய்வதன் ஊடாகவே நிவாரணங்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதோடு ஊழல் மோசடியாளர்களை மக்கள் பிடித்துக்கொடுக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பவேண்டாம். ஜனாதிபதியும் அதனையே கூறுகின்றார்.

ஊழல் மோசடியாளர்களுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டாம். வாக்கு அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. ஆகவே ஊழல் மோசடியாளர்கள் யார்? எந்த தொகுதியில் இருக்கின்றார் என்பதை மக்கள் அறிவார்கள். அப்படியான நபர்களுக்கு அவர்கள் வாக்களிக்கக்கூடாது.

ஊழல் மோசடிகளை சட்டத்தின் ஊடாக அல்ல, வாக்களிப்பின் ஊடாகவே தடுத்துநிறுத்த முடியும். வாக்களிக்கின்ற மக்கள், இந்த நாட்டை விழுங்கிய மற்றும் மோசடி செய்தவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது. ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாகவே நடக்கிறது.

அவர்களுக்கே மக்கள் மீண்டும் வாக்களிக்கின்றார்கள். விசேடமாக சமூக வலைத்தளங்களில் அனைத்தையும் அறியமுடியும்.

அந்தந்த மாவட்டங்களில் ஊழல் செய்பவர்கள் யார் என்பதை மாவட்ட மக்களே அறிவதால் அவர்களுக்கு வாக்களிப்பதை தவிர்த்தால் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும்.

நான் அரசியலில் அதிருப்தியடைந்து பேசவில்லை. நாங்கள் விலகி மற்றவர்களுக்கு இடமளிக்க வேண்டும். சாதாரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை தவிர்த்து, 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் விலகிச்செல்ல வேண்டும்.

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நான் எனது நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளேன் என்பதோடு ஏனைய அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்வேன்.

நான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாளன். எனது கட்சிக்கு எந்த வகையிலும் நான் துரோகம் இழைத்ததில்லை. சுதந்திரக் கட்சியிலிருந்தே எனக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers