ரஞ்சித் டி சொய்சாவின் மறைவால் ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடம்? நாளை தீர்மானம்

Report Print Kanmani in அரசியல்

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் பதவி வெற்றிடத்துக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது தொடர்பில் நாளை தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, அதன் முடிவை இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பதவி வெற்றிடம் தொடர்பில் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு நாளைய கூட்டத்தின் பின்னர் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மறைந்த ரஞ்சித் டி சொய்சாவுக்கு அடுத்த படியாக 2015ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளை, அப்போதைய ஐ.ம.சு.மு. வேட்பாளர் வருண லியனகே பெற்றுள்ளதுடன், தற்போது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நிவித்திகலை ஆசனத்திற்கான அமைப்பாளராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers