மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் பணியில் கோட்டாபய! சீர்குலைக்கும் முயற்சியில் அரசியல் சதி

Report Print Vethu Vethu in அரசியல்

மக்களுக்கான உறுதி மொழிகளை நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் மாற்றத்தை நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள். அதற்கு மதிப்பளித்து ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக டிலான் பெரேரா கூறினார்.

பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

இந்த வேலைத்திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது. ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க சில அரசியல் சக்திகள் முயன்று வருகின்றன.

சுவிட்சர்லாந்து தூதரகம் தொடர்பான சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவது இதன் நோக்காகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Latest Offers

loading...