கூட்டமைப்புக்குள் எந்த முரண்பாடும் இல்லை! ஒற்றுமையுடன் பொதுத்தேர்தலை எதிர்கொள்வோம் என்கிறார் மாவை

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் எந்தவித முரண்பாடும் இல்லை. கூட்டமைப்பை உடைக்கும் நோக்கம் பங்காளிக் கட்சிகளுக்குள் இல்லை.

தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன ஓரணியில் ஒற்றுமையுடன் நின்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.

இது தொடர்பில் நேரில் பேசுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புளொட் மற்றும் ரெலோ கட்சிகள் விலகி தனி வழியில் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Latest Offers

loading...