முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ரோயல் பார்க் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சர்மந்த அந்தனி ஜயமஹா என்பவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்த பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.

ஜயமஹா வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவும் எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், விடுதலை செய்யப்பட்ட தினத்திலேயே குறித்த நபர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தற்பொழுது குறித்த நபர் சிங்கப்பூரில் தங்கியிருப்பதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

Latest Offers