கொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்!

Report Print Varun in அரசியல்

கொழும்பு நகருக்கு தனியார் வாகனங்கள் பிரவேசிப்பதில் கட்டுப்பாட்டை விதிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர எல்லைக்குள் பிரவேசிக்கின்ற தனியார் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் அரசாங்கம் புதிய திமனத்தை இந்த தீர்மான நடைமுறைப்படுத்த நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நகருக்குள் வாகனங்களை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த புதிய கட்டுப்பாட்டை விதிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்ற வாகனங்களை வகைப்படுத்தி, அவற்றின் வகையின் அடிப்படையில் கட்டணத்தை அறவிடுவது குறித்தும் ஆலோசிக்கப்படடு வருகிறது.

அதேநேரம், வாகன நெரிசலை முறையாக முகாமை செய்யும் வகையில் பொதுமக்களுக்கு வினைத்திறனான பொதுப்போக்குவரத்து சேவையை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, பொதுப் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசாங்கம் பல அதிரடி மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers