பொதுத்தேர்தலின்போது கூட்டமைப்பின் வாய்ப்பு யாருக்கு..? சம்பந்தன் முக்கிய அறிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும். படித்த இளையோருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கவுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேற்றுமுன்தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் பேசப்பட்டது.

இம்முறை படித்த இளையோருக்கு அதிக வாய்ப்பு வழங்கவுள்ளோம் என்று இதன்போது சம்பந்தன் குறிப்பிட்டார். அத்துடன் இம்முறை அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.