பொதுத் தேர்தலில் போட்டியிடும் திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

பல்வேறு அரசியல் மோதல்கள் காரணமாக சில காலம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து விலகி இருந்த திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தேவையான பின்னணியை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கண்டி நகரில் இரண்டு இடங்களில் அலுவலகங்களை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு பொறுப்பாக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க நேரடியான பங்களிப்பை வழங்கியிருந்ததுடன் மீண்டும் மக்கள் மற்றும் கட்சியினர் இடையில் அதிகமாக பேசப்படும் நபராக காணப்பட்டார்.

அத்தநாயக்க கண்டி மாவட்டத்தில் உடுத்தும்பர தொகுதி அல்லது கண்டி தொகுதியின் ஊடாக தேர்தலில் போட்டியிடலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers