ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் வெளியில் தென்படாத சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இதுவரை எந்த செய்தியாளர் சந்திப்புகளையும் நடத்தவில்லை என்பதுடன் பகிரங்கமாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவில்லை.

இதனால் அவருக்கு ஆதரவு வழங்கி வரும் தரப்பினர் மத்தியில் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியினருடனான சந்திப்பு நேற்று நடைபெற்றதுடன் அதில் சஜித் பிரேமதாச கலந்துக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பல முறை செய்தியாளர் சந்திப்புகளில் கலந்துக்கொண்டதுடன் தேர்தல் தோல்வி தொடர்பான தனது ஆய்வுகளை வெளியிட்டிருந்தார்.

எனினும் சஜித் பிரேமதாச இதுவரை அது சம்பந்தமாக எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதுடன் ஒரு முறை மாத்திரம் வோக்சோல் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்திருந்தார்.

Latest Offers

loading...