ஆளும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது

Report Print Kamel Kamel in அரசியல்

ஆளும் கட்சிகளது தலைவர்கள் கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து ஆளும் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முதல் தடவையாக அலரி மாளிகையில் ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித்தலைவர்கள் கூட்டம் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தில் நடைபெற்று வந்தது.

Latest Offers

loading...