சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி மறுப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட சம்பவத்துக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தொடர்பிருப்பதாக வெளியான தகவலை கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் ஐக்கிய தேசியக்கட்சி அறிந்திருந்த நிலையிலேயே இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் குறித்த பணியாளருடன் ஐக்கிய தேசியக்கட்சியின் எவரும் ஒத்துழைக்கவில்லை என்று அகில விராஜ் காரியவசம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் கைச்சாத்திட்டாலும் அது ஆச்சரியப்படுத்துவதற்கில்லை.

தற்போது இந்த உடன்படிக்கையில் 70 வீதப்பகுதியில் பிரச்சினையில்லை என்று அமைச்சர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சில நாட்களில் 90 வீதம் அளவில் இந்த உடன்படிக்கையில் திருப்தி என்று அவர்கள் கூற வாய்ப்பிருப்பதாகவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...