புற்றுநோய்க்கான மருந்து கொள்வனவுக்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Report Print Ajith Ajith in அரசியல்

புற்றுநோயாளர்களுக்கு தேவையான மருந்துக்களை கொள்வனவு செய்ய 1000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது.

மஹரகமையில் உள்ள அபேக்ஷா நிறுவகத்தில் கடந்த 6 மாதங்களாக மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது.

இதன்காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

இந்தநிலையில் பக்லிடெக்சால், மோர்பின் உட்பட்ட 25 அவசியமான மருந்துகளை கொள்வனவு செய்யவே நிதி ஒதுக்கீடு செய்ய இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார அமைச்சின் செயலர் பி.எஸ்.எம் சார்ல்ஸ் ஆகியோர் திறைசேரியின் செயலர் எஸ். ஆர் ஆட்டிக்கலவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இது சாத்தியமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...