சுவிஸ் தூதரக பணியாளர் உண்மையில் கடத்தப்பட்டாரா? பாதுகாப்பு செயலாளரின் விளக்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் குற்றப்புலனாய்வுப்பிரிவோ அல்லது சட்டத்தை அமுல்படுத்தும் எந்தவொரு பிரிவோ சுவிஸ் தூதரக பணியாளரை கடத்தவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

இந்தநிலையில் சுவிஸ் தூதரகப் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒரு நாடகமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான உண்மை சுவிஸ் தூதருக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்கத்தைய நாடுகளில் இலங்கை படையினருக்கு எதிரான தோற்றம் இருந்துக்கொண்டேயிருக்கிறது என்று கமல் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் படையினர் மத்தியில் ஒழுங்கு மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.