அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்தாலும் ஆச்சரியமில்லை : ஹர்ச டி சில்வா

Report Print Ajith Ajith in அரசியல்

செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி சந்தையின் தன்னாதிக்கத்தை நிலைநிறுத்த சில அரிசி ஆலை நிறுவனங்கள் செயற்படுகின்றன. அரிசி விலையிலும் மாபியா செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் நேற்று நாடு அரிசியின் விலையை 98 ரூபாவாகவும் சம்பா அரிசியின் விலையை 99 ரூபாவாகவும் குறைத்தமை தொடர்பிலேயே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும்,

இந்த விலையை இன்னும் குறைத்திருக்கமுடியும். ஏனெனில் ஆலை உரிமையாளர்கள் அரிசியை உற்பத்தியாளர்களிடம் இருந்து 40 ரூபாவுக்கே கொள்வனவு செய்கின்றனர்.

இதேவேளை முன்னைய அரசாங்கம் சிறிய அரிசி உரிமையாளர்களை பாதுகாக்க செயற்படுத்திய திட்டங்களை நடைமுறை அரசாங்கம் இல்லாமல் செய்திருக்கிறது.

இந்தநிலையில் எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்று தெரிவித்துள்ளார்.