சுவிஸ் தூதுவருடன் எந்த பிரச்சினையும் இல்லை: தினேஷ்

Report Print Steephen Steephen in அரசியல்

சுவிற்ஸர்லாந்து தூதுவருடன் தனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் தூதரகத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்டதாக கிடைத்துள்ள முறைப்பாடு சம்பந்தமான விடயங்கள், தூதுவருடன் மிகவும் நட்புறவாக, ராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

நாங்கள் தொடர்ந்தும் தூதுவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த பிரச்சினையை மிகவும் ராஜதந்திர மட்டத்தில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தூதரகத்தின் ஊழியர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தூதுவர் பல முறை வெளிவிவகார அமைச்சுக்கு வந்தார். எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் மிகவும் நட்புறவுடன் செயற்பட்டு வருகின்றோம்.

அவர்களின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் எமது நிலைப்பாடு நாட்டின் சட்டம். இதனடிப்படையில் நாங்கள் செயற்படுவோம் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.