ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண லியனகே

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானதை அடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படும் வருண லியனகேவை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பட்டியலில் அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளை வருண லியனகே பெற்றுள்ளதால், ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

வருண லியனகே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த பின்னர், அந்த கட்சியின் தொகுதி அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றார். வருண லியனகேவின் பெயரை பரிந்துரைத்து அனுப்புமாறு தேர்தல் ஆணைக்குழு, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவித்துள்ளது.