பாதுகாப்பு அமைச்சர் யார்..? மங்கள சமரவீர கேள்வி

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் யார் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கான துறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று வெளியிடப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தலை பாருங்கள். பாதுகாப்பு அமைச்சு என்பது மன்னன் ஒருவரின் கீழ் உள்ள உச்ச அமைச்சை போன்றது. சமூக ஒழுக்கம் என்ற ஒன்றும் உள்ளது.

ஆட்பதிவு, அரசசார்பற்ற அமைப்புகள், சகல பொலிஸ் நிலையங்கள், சட்டம், ஒழுங்கு உட்பட பல துறைகள். பாதுகாப்பு அமைச்சர் யார் என்பது தற்போது பில்லியன் ரூபாய் கேள்வி?. என மங்கள தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.