என்னை ஏமாற்றி ராஜாங்க அமைச்சர் பதவியே கொடுத்தனர் - வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ஊழல், மோசடிகளை கண்டறியும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சியின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ராஜாங்க அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

கேள்வி - உங்களுக்கு தற்போது செய்தியாளர்களை நினைவில் இல்லை தானே?.

பதில் - இல்லை... இல்லை.. நன்றாக நினைவில் இருக்கின்றனர். அமைச்சர் பதவி கிடைத்திருந்தால் மறந்து போயிருக்கலாம்.

கேள்வி - அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதால் கவலையில் இருக்கின்றீர்களா?.

பதில்- ஐயோ இல்லை. நான் அரசியல் நோக்கம் ஒன்றுக்காக வந்தவன். அதனை செய்துக்கொண்டிருப்பேன்.

கேள்வி - உங்களை ஏமாற்றி விட்டனர் அல்லவா?.

பதில் - இவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். ராஜாங்க அமைச்சர் பதவியையே வழங்கினர் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.