வற் வரி குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் பொருட்களின் விலைகள் குறையவில்லை - உணவக உரிமையாளர்கள் சங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

பெறுமதி சேர் வரியை (VAT) குறைத்துள்ளதாக அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தாலும் எந்த அத்தியவசிய பொருட்களின் விலைகளும் குறையவில்லை என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கத்தினால் குறைக்க முடியாதல் போனதே இதற்கு காரணம் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சோற்று பொதி ஒன்றின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கத்தினால் குறைக்க முடியாமல் போனதே இதற்கு காரணம். பெறுமதி சேர் வரி குறைக்கப்பட்டதாக அரசாங்கம் மக்களுக்கு பெரிய பிரச்சாரத்தை செய்தது. எனினும் எந்த பொருளின் விலைகளும் இதுவரை குறையவில்லை.

அத்துடன் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாய். குறிப்பாக காய்கறி விலைகளும் அதிகரித்துள்ளன. கரட் 220 ரூபாய். லீக்ஸ் 300 ரூபாய். பொருட்களின் விலைகள் இப்படி இருக்கும் போது மறுபுறம் வாசுதேவ நாணயக்கார, 15 அலகுகளுக்கு மேல் தண்ணீரை பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் அதிகரிக்கப்படும் எனக் கூறியுள்ளார், என குறிப்பிட்டுள்ளார்.