மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவொன்றை பிறப்பிக்க வேண்டும்! சி.வி.கே.சிவஞானம்

Report Print Sumi in அரசியல்

மணல் மற்றும் கிரவல் போன்றவற்றை அகழ்வு செய்யும் நடவடிக்கைகளை தடுப்பது குறித்து ஜனாதிபதி உத்தரவொன்றை பிறப்பிக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததன் பின்னர் கிரவல் மற்றும் மணல் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதியினால் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட விடயம் வரவேற்கப்பட வேண்டியது ஒன்று.

எனினும் அது நிறுத்தப்பட்டு தற்பொழுது எங்கு எங்கெல்லாம் மணல் அள்ளக்கூடாது என்று இருந்ததோ அந்த இடங்களில் எல்லாம் தற்போது மண் அகழ்வு மிகவும் சுதந்திரமாக இடம்பெற்று வருகின்றமை வருத்தமளிக்கின்றது.

ஜனாதிபதியின் குறித்த செயற்பாடானது வரவேற்கக்கூடிய ஒரு விடயம் எனினும் மணல் அகழ்வை தடுப்பது குறித்து ஜனாதிபதி உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers

loading...