ஹம்பாந்தோட்டையை கைவிடும் சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கைவிட்டு, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பதுளை மாவட்டத்தை கைவிட்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பதால், அவர் கொழும்பு நகர மையமாக கொண்டு இருக்க வேண்டும் எனவும் இதன் காரணமாக அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கைவிட்டு, கொழும்புக்கு வர வேண்டும் என அவருக்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர்.