சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் கொழும்பில்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கொழும்பு டாலி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு இன்று அழைத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தற்போது தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாகவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பு பணிகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பாக இன்றைய தினம் தொகுதி அமைப்பாளர்களிடம் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சியின் தலைவர்கள் கூட்டத்திலும் புதிய கூட்டணி தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த கட்சி தலைவர்கள் இணங்கியதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...