இலங்கை வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்ஷூ மோடேகி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவுள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து, இலங்கையுடன் இருக்கும் நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கை வரும் ஜப்பானிய அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Latest Offers

loading...