கூட்டமைப்பின் கூட்டம் 17ஆம் திகதிக்கு பின் நகர்ந்தது

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையேயான கூட்டம் நேற்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும், திட்டமிட்டவாறு அது நடைபெறவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ள இருந்தனர்.

எனினும், இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா சுகவீனம் காரணமாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனைய இரு கட்சிகளின் தலைவர்களும் சென்றிருந்தனர்.

இரு கட்சிகளுடன் மட்டும் இந்த விடயத்தை ஆராய்வது பொருத்தமற்றது என்பதால், இந்த விடயத்தை எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடுவது என்று ஏனையோர் தீர்மானித்தனர் என்று அறியமுடிந்தது.

எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொள்ளவுள்ளார். அதற்கு முதல்நாள் கூடி இந்த விடயம் தொடர்பாக ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...