இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம்! பாகிஸ்தான் கடும் கண்டனம்!

Report Print Ajith Ajith in அரசியல்

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டம் தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்

காஸ்மீரில் சிறுபான்மையினர் மீது மனிதாபிமானமற்ற வகையில் இந்தியா செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாட் ஹட்டாக்கை நேற்று அழைத்து பேச்சு நடத்திய பாகிஸ்தான் ஜனாதிபதி இந்த கண்டனத்தை வெளியிட்டார்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இந்தியா தமது பாஸிஸ முகத்தை காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் காஸ்மீரில் இந்தியாவின் அத்துமீறல்கள் தொடர்வதை இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

பாகிஸ்தான் வருடந்தோறும் செவாக் பண்டிகையை நடத்துவதன் மூலம் பௌத்த செல்வாக்கை நிலைபெறச்செய்திருப்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Latest Offers

loading...