சஜித்தை பழிவாங்கும் ரணில்! மற்றுமொரு தடை உத்தரவு

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தடை விதித்துள்ளார்.

அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என ரணில் கூறியுள்ளர்.அத்துடன் எந்தவொரு உறுப்பினருக்கும் தேசிய பட்டியலில் பதவி வழங்கக்கூடாதென ரணில் தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைக் கைவிட்டுவிட்டு கொழும்பு மாவட்டத்திலும், ஹரின் பெர்னாண்டோ பதுளையைக் கைவிட்டுவிட்டு கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கு தயாராகுவதாக தகவல் வெளியான நிலையில் ரணில் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு சஜித் பிரேமதாஸ அழுத்தம் கொடுத்து வருகிறார். எனினும் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித்திற்கு வழங்க ரணில் தொடர்ந்தும் மறுத்து வருகிறார்.

இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவினால் இவ்வாறான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.