நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் சஜித்

Report Print Vethu Vethu in அரசியல்
661Shares

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி, செயற்பாட்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாத நிலையில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடியை தீர்த்து சஜித் பிரேமதாஸவுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. எனினும் அவர் பணிகளை ஆரம்பிப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் தற்போது உள்ள அனைத்து நெருக்கடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து எதிர்வரும் வாரம் மீண்டும் தனது பணிகளை ஆரம்பிப்பதற்கு சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் தான் சென்ற அனைத்து பகுதிகளுக்கு மீண்டும் சென்று மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதாக சஜித் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் 154 மக்கள் சந்திப்புக்களில் சஜித் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர்களின் எதிர்காலத்திட்டத்திற்கமைய அனைத்து தொகுதிகளுக்கும் சென்று நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு சஜித் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகவும் வெற்றிகரமாக முகம் கொடுத்து ஐக்கிய தேசிய கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கம் என சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் தனக்கு எதிராக சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அச்சப்படாமல் முகம் கொடுப்பதற்கு தான் தயார் என சஜித் ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.