MCC உடன்படிக்கையை அரசாங்கம் நிராகரிக்கவில்லை! அமைச்சர் டளஸ் அழகப்பெரும

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவின் மிலேனியம் சவால் கோப்பரேசன் நிதியுதவியை அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனை இன்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகரித்த இந்த நிதியுதவி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனமாக ஆராய்ந்து வருகிறது.

பின்னர் அது பொதுமக்களின் விவாதத்துக்கு விடப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 480 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முன்னைய அரசாங்கம் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தமையும் ஜனாதிபதி தேர்தலின்போது இது தீவிரமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers