சஜித் பிரேமதாச தோல்வியடைவார் என முன்கூட்டியே அறிந்திருந்தேன் - ரணில்

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தலில் தோல்வியைத் தழுவுவார் என தாம் முன் கூட்டியே அறிந்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தவர்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வு ஒன்று காலியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற போது தாம் சஜித் பிரேமதாச தேர்தலில் தோல்வியடைவார் என முன்கூட்டியே அறிந்திருந்ததாகத் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.