இலங்கை நட்புரிமையையே விரும்புகின்றது! ஜனாதிபதி தெரிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

சர்வதேச சக்திகள் உட்பட்ட நாடுகள் இலங்கையின் விவகாரங்களில் தலையிடக்கூடாது.

இலங்கையை பொறுத்தவரை அது நட்புரிமையையே விரும்புகிறது. ஆதிக்கத்தை விரும்பவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்திருக்கும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் மொடேகி டொஸிமிட்சுவை சந்தித்தபோதே இதனைக்குறிப்பிட்டார்.

ஜப்பானில் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள ஆசியாவின் நண்பர்கள் என்ற மாநாட்டுக்கு கோட்டாபய ராஜபக்ச பங்கேற்கவேண்டும் என்ற அழைப்பை ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் இதன்போது விடுத்தார்.