பொது தேர்தலில் போரிஸ் ஜோன்சன் அமோக வெற்றி! ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்து

Report Print Murali Murali in அரசியல்
100Shares

பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

“பொதுத் தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்றதற்கு போரிஸ் ஜோன்சனுக்கும் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் வெற்றியானது தேசிய கொள்கை சார்பு அரசாங்கங்களின் தற்போதைய உலகளாவிய போக்கை பிரதிபலிக்கின்றது.

புதிய பிரதமருக்கும், அரசாங்கத்திற்கும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்சவும் போரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துகளை கூறியுள்ளார்.