நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி தரப்பில் அமரும் 12 ஐ.தே.கட்சி உறுப்பினர்கள்

Report Print Vethu Vethu in அரசியல்

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கான ஆசனங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் 12 பேர் அமரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது இந்த மாற்றம் ஏற்படவுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகளவான உறுப்பினர்கள் எதிரணியில் இருப்பதால், இவ்வாறு ஆளும் கட்சி பக்கத்தில் ஆசனம் வழங்க நேரிட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு 116ஆசனங்களும் எதிர்க்கட்சிக்கு 116 ஆசனங்களும் என்ற ரீதியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் புதிய அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 96 ஆகும். சபாநாயகரை தவிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 128 ஆகும்.

இந்த நிலைமையினால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேருக்கு எதிரணி ஆசனத்தில் அமர சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.

அதற்கமைய ஆளும் கட்சியில் வெற்றிடமாக உள்ள 12 ஆசனங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.